ஏரல்:
ஏரல் அருகே உள்ள பண்ணைவிளையிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் தேசத்துக்கான பொதுவான உபவாச ஜெபக்கூட்டம் நடந்தது. ஏரல் சேகர தலைவர் கிங்ஸ்லி ஜெபம் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி ஜார்ஜ் ஏசுதாசன் தேவசெய்தி அளித்தார். ஜென்சன் ஆராதனை நடத்தினார். பிரேம் குழுவினர் இசை வாசித்தனர். பொன்மனுவேல் ஜெபித்து ஆசீர்வாதம் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்