அடிப்படை வசதிகள் கேட்டு உண்ணாவிரதம்

மேலூர் அருகே நாவினிப்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கேட்டு உண்ணாவிரத போராட்டம் நடந்தது

Update: 2023-01-09 20:30 GMT


மேலூர் அருகே நாவினிப்பட்டி ஊராட்சியில் 6 மற்றும் 7-வது வார்டில் ஆதிதிராவிட மக்கள் குடியிருப்பு உள்ளது. இப்பகுதியில் குடி தண்ணீர், சாலை வசதி, தெருவிளக்கு, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மேலூரில் யூனியன் அலுவலகம் முன்பு கால வரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தாலுகா செயலாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் முத்துவேல், துணை செயலாளர் மெய்யர், மாவட்ட குழு உறுப்பினர் திலகர், தாலுகா குழு உறுப்பினர்கள் பெரியவர், சந்திரசேகரன், ராதா, ஸ்டாலின் சுப்பிரமணியன், ரவி, பழனிச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பலர் பேசினர். அதனையடுத்து மேலூர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசந்திரன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அடிப்படை வசதிகளை செய்து தருவதாக நாவினிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பிரதவுஸ்பாத்திமா எழுத்து பூர்வமாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்