அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி உண்ணாவிரதம்

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

Update: 2023-09-16 18:45 GMT

வேதாரண்யம் அருகே கத்தரிப்புலம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஊராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் கிளைச் செயலாளர் ராஜேந்திர பூபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவை சுப்பிரமணியன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் வெற்றியழகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகையன், தேவேந்திரன், முருகானந்தம், நடராஜன், கண்ணன், சங்கு மற்றும் பலர் கலந்து கொண்டனர். 3 மாதங்களாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வராததை கண்டித்தும், பழுதடைந்த சாலைகளை செப்பனிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். தாசில்தார் ஜெயசீலன், ஒன்றிய ஆணையர் ராஜூ, கரியாபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயேந்திர சரஸ்வதி, ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி, ஊராட்சி செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்