28-ந்தேதி டாஸ்மாக் கடைகளை அடைத்து உண்ணாவிரதம்

சட்டவிரோதமான பார்களை மூடக்கோரி 28-ந்தேதி டாஸ்மாக் கடைகளை அடைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடபோவதாக டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.

Update: 2022-11-11 18:45 GMT

நாகையில் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு அவசர கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர்கள் ராமானுஜம், சிவகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். ஏ.ஐ.டி.யூ.சி. டாஸ்மாக் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மகேந்திரன் வரவேற்றார்.சட்டவிரோதமாக தனியார் பார்களுக்கு துணை போகும் டாஸ்மாக் நிர்வாகத்தின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். சட்டவிரோத பார்களை மூடி அதன் உரிமையாளர்களை கைது செய்ய வேண்டும். ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய டாஸ்மாக் கடைகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வருகிற 28- ந்தேதி (திங்கட்கிழமை) டாஸ்மாக் கடைகளை அடைத்து, நாகை மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., தொமுச, அண்ணா தொழிற்சங்கம், தொழிலாளர் விடுதலை முன்னணி, டாஸ்மாக் பணியாளர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.முடிவில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில செயலாளர் கோவிந்தராஜன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்