பால் விலையை உயர்த்தக்கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
பால் விலையை உயர்த்தக்கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
பால் விலையை உயர்த்தக்கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பசுவின் பால் விலையை ரூபாய் 42 ஆகவும், எருமை பாலின் விலை ரூ.51 ஆகவும் உயர்த்த வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி கலசப்பாக்கம் ஒன்றியம் காந்தப்பாளையம் அரசினர் உயர்நிலைப் பள்ளி அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் தீபாவளி மற்றும் பொங்கல் போனசாக பால் லிட்டருக்கு ஒரு ரூபாய் விலையை உயர்த்தி தரவேண்டும் என கோஷமிட்டனர். இதில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் திரளானோர் கலந்து கொண்டனர்.