விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பபெறக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-05-17 20:55 GMT

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் செந்தில்குமார், வீரமோகன் ஆகியோர் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் பாஸ்கர், பழனிஅய்யா, பன்னீர்செல்வன், கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர்கள் சாமி.நடராஜன், மாசிலாமணி, மாவட்ட செயலாளர்கள் கண்ணன், சாமு.தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நிலம், நீர், பொதுபயன்பாட்டை தடுத்து சிறப்பு திட்டம் என்ற பெயரில் பெரும் நிறுவனங்களுக்கு மாற்றும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், இயற்கைக்க எதிரான செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்