விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வாசுதேவநல்லூரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாசுதேவநல்லூர்:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வாசுதேவநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய சங்கத்தின் வட்டார தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் வேலு, ராயகிரி நகர செயலாளர் சின்ன வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரும்பு விவசாயிகளின் நலன் கருதி வாசுதேவநல்லூரில் உள்ள சர்க்கரை ஆலையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் கரும்புக்கு டன் ஒன்னுக்கு ரூ.4,000 வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளர் இசக்கிதுரை, விவசாய சங்க மாவட்ட செயலாளர் வேலாயுதம், ஏ.ஐ.டி.யு.சி. தென்காசி மாவட்ட செயலாளர் சுப்பையா, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சமுத்திரக்கனி, விவசாய சங்க வட்டார செயலாளர் கருப்பையா, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் முருகன், ராமநாதபுரம் ரவிக்குமார் மற்றும் நிர்வாகிகள் மாரியப்பன், கிட்டப்பா பாக்கியம், சண்முக வடிவு, கண்ணன், பால விநாயகர், ஜெயகணேசன் சீனிவாசன், பாண்டியன், மணிகண்டன், குருவு மாடசாமி, யேசுராஜன், வேலுச்சாமி, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.