விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பழனியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-17 19:00 GMT

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், பழனி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன் (பழனி), சின்னத்துரை (தொப்பம்பட்டி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, பழனி, தொப்பம்பட்டி ஒன்றிய பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுப்பன்றி, யானை, மயில் உள்ளிட்டவை விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்