விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-09-06 20:26 GMT

அம்மாப்பேட்டை ஒன்றியம், விழுதியூர் ஊராட்சி பகுதிகளில் காட்டுப் பன்றிகள் தொல்லையால் விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஆகவே, காட்டுப்பன்றிகளை பிடிக்கக்கோரி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக சமீபத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படாததால் காட்டுப்பன்றிகள் விளைநிலத்தை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். ஆகவே, விழுதியூர் பகுதிகளில் விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தக்கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் பாதிக்கப்பட்ட வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், நகர செயலாளர் ராஜாராமன், விவசாயிகள் கோவிந்தராஜ், முருகையன், கருப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்