விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-10-10 18:45 GMT

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா தலைவர் சகாதேவன் தலைமை தாங்கினார். கார்த்திகைசாமி, தங்கராசு, காந்தி, கிருஷ்ணன், விவசாய சங்க மாவட்ட தலைவர் முத்துராமு, மாவட்ட செயலாளர் மயில்வாகனன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சந்தானம், தாலுகா செயலாளர் செந்தில்குமார், ஊராட்சி தலைவர் சேத்திடல் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.எஸ்.மங்கலத்தில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். போதுமான டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டும். சேத்திடல் மற்றும் முத்துப்பட்டினம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். காட்டு மாடுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர்களை சேதப்படுத்தும் காட்டு மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்