விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காட்டுமன்னார்கோவிலில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2023-07-20 18:45 GMT

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு விவசாய சங்க ஒன்றிய தலைவர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார். பொது சிவில் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், டெல்லியில் போராடிய விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அகில இந்திய விவசாய சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், சங்க நிர்வாகிகள் முனுசாமி, தனபால், இளங்கோவன், மணி, வெற்றி, சாகுல் ஹமீது குமார் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்