வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும்-தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-03-17 18:45 GMT

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கூட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட பேரவை கூட்டம் சிவகங்கையில் நடந்தது. மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில ராஜா, துணைத்தலைவர் முத்துராமு, மாவட்ட செயலாளர் மோகன், பொருளாளர் விஸ்வநாதன், துணை தலைவர் அழகர்சாமி, துணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட துணை தலைவர் ஜெயராமன், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட துணை தலைவர் அண்ணாதுரை மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, காளையார்கோவில், இளையான்குடி, மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். நிவாரணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.

பேரணி

சிவகங்கை மாவட்ட விவசாயிகளை பாதுகாத்திட காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். மேலும் வருகிற வேளாண்மை பட்ஜெட்டில் இத்திட்டத்தை சேர்க்க வேண்டும். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு ஆதார விலையை தீர்மானிக்க வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திருத்தியதை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். ஏப்ரல் 5-ந் தேதி டெல்லி விவசாயிகள் பேரணியில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து 500 விவசாயிகள் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்