காட்டுமன்னார்கோவிலில் விவசாயிகள் சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

காட்டுமன்னார்கோவிலில் விவசாயிகள் சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-24 15:00 GMT

காட்டுமன்னார்கோவில்,

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை கண்டித்தும், காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகம் முன்பு நடந்தது. இதற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் ஜாகிர் உசேன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க முருகவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க, மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், சிறு குறு விவசாயிகள் சங்க தலைவர் இதயத்துல்லா, விவசாய சங்க, விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் புகழேந்தி, தனபால், பொன்னம்பலம், குமார் உள்பட பலர் கலந்து கொண்டு கைகளில் கருப்புக்கொடி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்