கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள ரிஷிவந்தியம் வட்டார விவசாயிகள் சுற்றுலா

கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள ரிஷிவந்தியம் வட்டார விவசாயிகள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

Update: 2022-11-25 18:45 GMT

ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியம் வட்டாரத்தை சேர்ந்த கரும்பு சாகுபடி செய்திருந்த விவசாயிகள் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் 2 பஸ்களில் சின்னசேலம் அடுத்த பொன்பரம்பட்டு கிராமத்தில் உள்ள முன்னோடி விவசாயி மஞ்சப்பன் என்பவரின் தோட்டத்திற்கு கண்டுணர் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். அட்மா திட்டம் சார்பில் உதவி தொழில் நுட்ப மேலாளர் மணிவேல் தலைமையிலான விவசாயிகள், கரும்பு வயலுக்கு சென்று கரும்பு நாற்றுகளை உற்பத்தி செய்தல், கரும்பு பருக்கள் சீவல் எந்திரம் செயல்படுத்தும் முறைகள், நுண்ணுயிர் பாசன சாகுபடியில் கரும்பு பயிர் இடைவெளி விட்டு நடவு செய்தல், தோகை உரித்தல், பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்களை நேரில் கண்டு தெரிந்து கொண்டனர். கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு கரும்பு உதவி அலுவலர் வெங்கடேசன் விளக்கி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்