குறுவை தொகுப்பு வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

குறுவை தொகுப்பு வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-26 18:44 GMT

கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய துணைத்தலைவர் முகமது கனி தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பொன்னுசாமி, மாவட்ட துணை செயலாளர் அன்பழகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். காவிரியில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிட வேண்டியும், குறுவை சாகுபடிக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதை தமிழக அரசு உறுதிசெய்ய வலியுறுத்தியும், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறுவை தொகுப்பு உள்ளிட்ட அரசின் சலுகைகளை புதுக்கோட்டை மாவட்ட காவிரி பாசன பகுதி விவசாயிகளுக்கும் வழங்ககோரியும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்