என்.எல்.சி.க்கு எதிராககருப்பு பட்டை அணிந்து விவசாயிகள் போராட்டம்

என்.எல்.சி.க்கு எதிராக கருப்பு பட்டை அணிந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-03-31 18:45 GMT


கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் விவசாயிகள் வந்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் என்.எல்.சி. நிர்வாகம் விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வேலைவாய்ப்பும் வழங்க வில்லை. ஆகவே என்.எல்.சி. நிர்வாகம் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு ரவீந்திரன் தலைமை தாங்கினார்.

விவசாயிகள் வேல்முருகன், குஞ்சிதபாதம், மதியழகன், ராஜசேகர், அறவாழி, ரெங்கநாயகி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக என்.எல்.சி.க்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து அனைவரும் கருப்பு பட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்