கொள்ளிடம் ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம்

கொள்ளிடம் ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம்

Update: 2022-12-31 20:17 GMT

தஞ்சை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வீரமாங்குடி, கோவிந்தநாட்டுச்சேரி, மரூர், சாத்தனூர் ஆகிய இடங்களில் மணல் குவாரிகள் உள்ளன. இதனால் ஆற்றில் தினமும் அனுமதிக்கப்பட்ட அளவை விடவும், அனுமதிக்கப்பட்ட இடங்கள் இல்லாமல் பிற இடங்களிலும் அதிகளவில் மணல் அள்ளப்படுகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் நீரோட்டம் பாதிக்கப்படுவதால், விவசாயத்துக்கும், குடிநீருக்கும் போதிய அளவு தண்ணீர் இல்லாமல் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளது. கொள்ளிடம் ஆற்றிலிருந்து பல மாவட்டங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு அனுப்படுவதால், மணல் குவாரிகளால் குடிநீர் திட்டங்களுக்கு ஆபத்து நேரிடலாம் என்பதால், கொள்ளிடம் ஆற்றை பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுத்தி நேற்று திருவையாறு அருகே விளாங்குடி கொள்ளிடம் ஆற்றில் இறங்கி கிராம மக்கள், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு காவிரி பாசன சமூக செயற்பாட்டாளர் வக்கீல் ஜீவக்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் விளாங்குடியைச் சேர்ந்த விவசாயிகள் பாலசுப்பிரமணியன், சச்சிதானந்தம், கலையரசி, பார்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்