விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நிலுவைதொகையை வழங்க கோரிக்கை
விருத்தாசலம்
விருத்தாசலம் அடுத்த ஏ.சித்தூர் ஆருரான் சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனே வழங்கக்கோரி மணிமுக்தாறு நீர்பாசன விவசாயிகள் நலச்சங்கம் மற்றும் ஜனநாயக கரும்பு விவசாயிகள் சங்கம், நாம் உழவர் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் நடைபெற்றது. இதற்கு மணிமுக்தாறு நீர் பாசன விவசாயிகள் சங்க தலைவர் தங்க தனவேல் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.