பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி நீடாமங்கலத்தில், 2 இடங்களில் சாலை மறியல்

பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி நீடாமங்கலத்தில் 2 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2022-10-18 18:45 GMT

பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி நீடாமங்கலத்தில் 2 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீடு வழங்கக்கோரி நீடமங்கலம் ஒன்றியம் வையகளத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்டக்குழு உறுப்பினர் கலியபெருமாள் தலைமை தாங்கினார்.

இதேபோல் ஒளிமதி கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கந்தசாமி, இந்தியகம்யூனிஸ்டு நிர்வாகி ராதா ஆகியோர் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலரும் சாலைமறியலில் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சாலை மறியல் நடந்த இடங்களுக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

சாலைமறியலால் நீடாமங்கலம்-திருவாரூர் சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்