விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி தஞ்சையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2022-09-17 21:01 GMT

தஞ்சாவூர்;

இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி தஞ்சையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் மணிமொழியன், மாவட்ட துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, சட்ட ஆலோசகர் அருணகிரி, சமூகநல ஆர்வலர் கடல்மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், உயிர்தியாகம் செய்து பெற்ற இலவச மின்சாரத்தை எக்காரணம் கொண்டும் ரத்து செய்யக்கூடாது. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட தொழிலாளர்களை விவசாய தொழிலில் ஈடுபடுத்த வேண்டும்.

விவசாய விளை பொருட்கள்

உர விலை உயர்வை கட்டுப்படுத்தி, கூட்டுறவுத்துறையின்மூலம் விற்பனை செய்ய வேண்டும். நெல் மற்றும் அனைத்து விவசாய விளை பொருட்களுக்கும் லாபகரமான விலை வழங்கப்பட வேண்டும். புதிய எண்ணெய் எரிவாயு கிணறுகள் தோண்ட தமிழகஅரசு அனுமதி அளிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.இதில் மாவட்ட தலைவர்கள் சின்னதுரை, மோகன்தாஸ், சிவக்குமார், மாவட்ட செயலாளர் ராமலிங்கம், நிர்வாகி செந்தில்வேலன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் நிர்வாகி கலைச்செல்வன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்