விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தக்கோரி கும்பகோணத்தில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-26 20:49 GMT

கும்பகோணம்;

பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தக்கோரிகும்பகோணத்தில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் அருகே உள்ள மெலட்டூர், விழுதியூர், சடையன்கால் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன் விளை நிலங்களில் குழிகளை ஏற்படுத்தி பெரும் இடையூறுகளை ஏற்படுத்துகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தை தடுக்க வலியுறுத்தி கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கை மனு

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினாா். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம் விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ராமலிங்கம், கல்யாணசுந்தரம், மணிவேல், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு காட்டுப்பன்றிகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.மேலும் வனத்துறை மூலம் காட்டுப்பன்றிகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கும்பகோணம் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.கும்பகோணம் அருகே உள்ள மெலட்டூர், விழுதியூர், சடையன்கால் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன் விளை நிலங்களில் குழிகளை ஏற்படுத்தி பெரும் இடையூறுகளை ஏற்படுத்துகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தை தடுக்க வலியுறுத்தி கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கை மனு

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினாா். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம் விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ராமலிங்கம், கல்யாணசுந்தரம், மணிவேல், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு காட்டுப்பன்றிகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.மேலும் வனத்துறை மூலம் காட்டுப்பன்றிகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கும்பகோணம் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்