விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வனவிலங்குகள் பயிர்களை அழிப்பதை தடுக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-10 18:45 GMT

குலசேகரம்:

வனவிலங்குகள் பயிர்களை அழிப்பதை தடுக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குமரி மாவட்டத்தில் வன விலங்குகளால் விவசாயிகளின் பயிர்கள் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் குலசேகரம் வனச்சரக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் வன விலங்குகளான குரங்குகள், காட்டுப் பன்றிகளால் விவசாய பயிர்கள் அழிக்கப்படுவதை வனத்துறையினர் தடுக்க வேண்டும். பேச்சிப்பாறையில் முடங்கிக் கிடக்கும் குரங்களுக்கான கருத்தடை மையத்தை செயல்படுத்த வேண்டும். வன விலங்குகள் தாக்கி உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். கேரளாவை போன்று விளை நிலங்களில் புகும் காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்ல அனுமதி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட துணை தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் விஜி, மாவட்ட பொருளாளர் சின்னதம்பி, மாவட்ட செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் கோரிக்கை விளக்க கூட்டம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்