கடலை விதைக்கும் பணியில் விவசாயிகள்
கடலை விதைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பழைய ஆதனக்கோட்டையில் பெரும்பாலான விவசாயிகள் கடலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மாண்டஸ் புயலினால் பெய்த மழையின் ஈரத்தைப்பயன்படுத்தி விவசாயிகள் கடலை விதை விதைத்து வருகின்றனர். விவசாயி ஒருவரது வயலில் விவசாயக் கூலித்தொழிலாளர்கள் கார்த்திகை பட்டத்தில் கடலை விதை விதைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எடுத்த படம்.