உழவர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

குரும்பூரில் உழவர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-24 18:45 GMT

தென்திருப்பேரை:

குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் திருச்செந்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மற்றும் சார்பதிவாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நகைக்கடன் தள்ளுபடிக்காக கடந்த 2021 செப்டம்பர் மாதம் 8-ந் தேதி மற்றும் 13-ந் தேதி நகைக்கடன்கள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டபோது 548 நகைப்பைகளில் 261 நகைப்பைகள் மாயமானது தெரியவந்தது. இதேபோல் வைப்புநிதியும் இருப்பில் இருப்பது போன்று போலியாக கணக்கை உருவாக்கி ரூ.27 கோடி வரை மோசடி செய்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் நகை, பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததை கண்டித்து நேற்று பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் உழவர்கள் அமைப்பு சார்பில் குரும்பூர் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக உழவர் முன்னணி துணைத்தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். மதுரை தமிழ் தேசிய பேரியக்கம் ராசு கண்டன உரையாற்றினார். இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தையொட்டி குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்