விவசாயிகள் கட்டாயம் இணையவழி பதிவு செய்ய வேண்டும்

தோட்டக்கலைத்துறை திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் கட்டாயம் இணைய வழி பதிவு செய்ய வேண்டும் என துணை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2022-08-27 17:23 GMT

திட்டச்சேரி:

தோட்டக்கலைத்துறை திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் கட்டாயம் இணைய வழி பதிவு செய்ய வேண்டும் என துணை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

இணையவழி பதிவு

தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தோட்டக்கலைத் துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இத்திட்டங்களின் கீழ் பயன் பெறுவதற்கு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டத்துக்கு மட்டுமே இணையவழி பதிவு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

2022-23-ம் நிதியாண்டு முதல் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்த உள்ள அனைத்து திட்டங்களுக்கும் இணையவழி பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் தங்களுக்குத் தேவையான திட்டக்கூறுகளின் கீழ் https://tnhorticulture.tn.gov.in/tnhortnet/ என்ற வலைதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நுண்ணீர் பாசன திட்டம்

நுண்ணீர் பாசன திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் https://tnhorticulture.tn.gov.in:8080 என்ற வலைதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். விவசாயிகள் தங்கள் ஆதார் எண், தொலைபேசி எண் மற்றும் அடிப்படை விவரங்களை இணையவழியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதன் மூலம் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்கள்.திட்ட இனம், உப இனம் ஆகியவற்றை அறிந்து கொள்வதோடு அவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்