விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

பட்டுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 23-ந் தேதி நடக்கிறது.

Update: 2022-09-19 20:42 GMT

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பட்டுக்கோட்டை கோட்டத்துக்கு உட்பட்ட (பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி) விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகத்தில் 23-ந் தேதி(வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில் பட்டுக்கோட்டை கோட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி வட்டத்துக்கு உட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்