உழவர் சந்தை விழிப்புணர்வு முகாம்

செங்கோட்டை வட்டாரம் ஆய்க்குடி வயல்வெளி பகுதியில் உழவர் சந்தை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2022-10-28 18:45 GMT

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் தென்காசி உழவர் சந்தைக்கு விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் வருகையை அதிகரிக்கும் வகையில் செங்கோட்டை வட்டாரம் ஆய்க்குடி வயல்வெளி பகுதியில் உழவர் சந்தை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) கிருஷ்ணகுமார் அறிவுரைப்படி நடந்த இந்த முகாமுக்கு தென்காசி உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி உழவர் சந்தை உதவி நிர்வாக அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தென்காசி வேளாண்மை வணிக உதவி அலுவலர் கிருஷ்ணன் வரவேற்று, வேளாண்மை வணிகத்திட்டங்கள் பற்றியும் பயன்கள் பற்றியும் விளக்கிக் கூறினார்.

முகாமில் உழவர் சந்தையின் பயன்கள் செயல்பாடுகள் பற்றியும் அடையாள அட்டை பெறும் வழிமுறைகள் பற்றியும் விவசாயிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்தல் பற்றியும் விளக்கிக் கூறப்பட்டது. உழவர் சந்தை விவசாயிகளுக்கு காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறை பற்றி தென்காசி உழவர் சந்தை உதவி நிர்வாக அலுவலர் கணேசன் விளக்கிக் கூறி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்