காலிபிளவர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

புதுப்பேட்டை பகுதியில் காலிபிளவர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Update: 2022-12-26 20:19 GMT

புதுப்பேட்டை, 

சுவை நிறைந்த உணவு பொருட்களில் ஒன்று காலிபிளவர். இதில் கால்சியம் சத்து நிறைந்து காணப்படுகிறது. அதோடு, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல உணவாக பார்க்கப்படுகிறது. இதுபோன்ற பல காரணங்களால், காலிபிளவருக்கு சந்தையில் என்றும் தனி இடம் உண்டு. இந்த பூக்களின் தேவை என்பதும் எப்போதும் இருக்கத்தான் செய்யும். இதுபோன்று தேவைகள் நிறைந்த விளை பொருட்களை சாகுபடி செய்வதன் மூலம் வருவாய் பெற முடியும். அந்த வகையில், மலை பயிரான காலிபிளவர் பூக்களை பண்ருட்டி பகுதியில் உள்ள விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

அந்த வகையில், புதுப்பேட்டை, கண்டரக்கோட்டை, பூண்டி, குச்சிபாளையம், சின்னப்பேட்டை, மேட்டாமேடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் காலிபிளவர் சாகுபடி செய்துள்ளனர்.சுமார் 3 மாத பயிரான இவை பனிக்காலத்தில் கூடுதல் மகசூல் தரக்கூடியவை. தற்போது நன்கு செழித்து வளர்ந்து பூக்கள் வைக்கும் தருவாயில் உள்ளது. கூடவே தற்போது இந்த பயிருக்கு ஏற்றவகையில் குளிரும் நிலவி வருவதால், நல்ல மகசூல் கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்