கோரம்பள்ளம்குளத்தில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

கோரம்பள்ளம்குளத்தில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Update: 2023-07-25 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் குளம் பாசனத்தின் கீழ்உள்ள அத்திமரப்பட்டி, முள்ளக்காடு, முத்தையாபுரம் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம், அத்திமரப்பட்டியில் உள்ள சங்க கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விவசாய சங்க தலைவர் என்.வி.பூபதி தலைமை தாங்கினார். செயலாளர் ரகுபதி, பொருளாளர் கந்தசாமி, துணை தலைவர் திருமால், ஆட்சி மண்டல உறுப்பினர் தானியேல், உப்பாற்று ஓடை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் அழகேசன், நம்மையாழ்வார், தவசிவேல், அழகுராஜ், இளங்கோவன், மகாராஜன், கிருபானந்தம், முருகேசன் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கோரம்பள்ளம் குளத்தில் ரூ.12 கோடி செலவில் தூர்வாரும் பணி தொடங்கி வைக்கப்பட்டு, 2½ மாதங்கள் ஆகியும், டெண்டர் விடப்பட்ட இடத்தில் இதுவரை ஒரு லாரி மண் கூட அள்ளப்படவில்லை. இந்த பணியில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தை கண்டித்தும், உடனே பணிகளை தொடங்கி மழைக்காலம் தொடங்குவதற்குள் விரைவாக தூர்வாரும் பணியை முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றகோரி விவசாயிகள் நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) கோரம்பள்ளம் 24 மடை கண்மாய் அருகே குளத்தின் உட்பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்