திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடக்கிறது.

Update: 2023-02-22 18:24 GMT

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடக்கிறது.

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதில் அனைத்துறை மாவட்ட அலுவலர்கள் விவசாயிகளிடம் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முகாமில் வட்டார அளவிலான அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். அப்போது விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுதாரருக்கு உடனடியாக ஒப்புகைச்சீட்டும் வழங்கப்படும். மேலும் இனி வரும் நாட்களில் 3-வது வெள்ளிக்கிழமைகளில் விவசாயிக்ள குறைதீர்வு கூட்டம் நடத்தப்படும்.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்