ஆரணியில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

ஆரணியில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.

Update: 2023-03-07 11:07 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவில் அருகாமையில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட (ஊதியம், வேலை வாய்ப்பு) திட்ட அலுவலர் அருண்குமார் தலைமையில் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர்கள் புஷ்பா, செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி தாசில்தார் ஆர்.ஜெகதீசன் வரவேற்றார்.

கூட்டத்தில் 75-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது பகுதிக்கு தேவையான விவசாய கோரிக்கைகளையும், பொதுமக்கள் சார்ந்த கோரிக்கைகளையும் முன்வைத்து பேசினார்கள். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சவீதா, திலகவதி, பா.விஜயலட்சுமி மற்றும் தோட்டக்கலை, நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்