கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்: நாளை மறுநாள் நடக்கிறது

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.

Update: 2023-06-20 18:45 GMT

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) கடலூர் கலெக்டர் அலுவலக வளாக தரைத்தளத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்வு கூட்ட அரங்கில் காலை 10.30 மணி அளவில் நடக்கிறது.

கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும். கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணி முதல் 10.05 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்க உள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம். இக்குறைகளுக்கு சம்பந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரிய பதில் அளிக்கவும், மேலும் தொடர் நடவடிக்கை எடுக்கவும் கலெக்டரால் அறிவுறுத்தப்படுவார்கள். ஆகவே இந்த வாய்ப்பை கடலூர் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்