தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது.
குறைதீர்க்கும் கூட்டம்
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. எனது (கலெக்டர்) தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன.
மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மைத் துறை. தோட்டக்கலைத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பதிவு செய்ய வேண்டும்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின் மனுக்களை அளிக்கவேண்டும்.
எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த கருத்துக்களை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.