திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. கூட்டத்திற்கு கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை சார்ந்த தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவு துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை வங்கியாளர்கள், பிற சார்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். எனவே இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்கள் கலந்து கொள்ள வேண்டும்.
இந்த தகவலை திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்தார்.