விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 21-ந் தேதி நடக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. இந்த கூட்டம் சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகங்களில் காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் குறைகள் தொடர்பான மனுக்களை நேரடியாக கொடுத்து தீர்வு காணலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.