விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 30-ந் தேதி நடக்கிறது.

Update: 2022-11-22 18:42 GMT


விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 30-ந் தேதி காலை 10.30 மணி அளவில் இம்மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை நேரடியாக கொடுத்து தீர்வு காணலாம். கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள், அரசு அலுவலர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்