விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-10-19 19:25 GMT

சாத்தூர், 

சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் அனிதா தலைமை தாங்கினார். ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் திருமலைச்சாமி, ராஜபாளையம் வட்டாட்சியர் சீனிவாசன், வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ரெங்கநாதன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் குலசேகரபுரம், வேப்பிலைப்பட்டி, ஜக்கம்மாள்புரம், முத்துலிங்காபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளப்பயிரை காட்டு பன்றிகள் அழித்து விடுவதாக புகார் தெரிவித்தனர். இதற்கு கோட்டாட்சியர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினர். வேளாண்மை துறை சார்பில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர். கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்