விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வருகிற 22-ந் தேதி நடக்கிறது.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வருகிற 22-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் நடக்கிறது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார். எனவே இக்கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்துகொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இந்த தகவல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.