விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 19-ந் தேதி நடக்கிறது
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் வருகிற 19-ந் தேதி காலை 11 மணியளவில் கோட்ட அளவிலான விவசாயிகளை குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.