விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நெல்லையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது
நெல்லை மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான (அக்டோபர்) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலக 2-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடக்கிறது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்குகிறார். கூட்டம் 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து தரப்பு அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனர். எனவே இந்தக் கூட்டத்தில் நெல்லை மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை, மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.