விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வருகிற 28-ந் தேதி காலை 10.30 மணியளவில் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயனடையலாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.