இறையூர் தனியார் சர்க்கரை ஆலையை அரசே நடத்தக்கோரி உழவர் முன்னணியினர் காத்திருப்பு போராட்டம்

இறையூர் தனியார் சர்க்கரை ஆலையை அரசே நடத்தக்கோரி உழவர் முன்னணியினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2022-06-12 16:23 GMT

பெண்ணாடம், 

பெண்ணாடத்தை அடுத்த இறையூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையை அரசு கையகப்படுத்தி மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளின் பெயரில் ரூ.200 கோடிக்கு மேல் உள்ள கடன்களை ரத்து செய்ய வேண்டும், ஆலை தொழிலாளர்களுக்கு தரவேண்டிய சம்பள பாக்கியை அரசு பெற்று கொடுத்து அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், கடந்த 5 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.116 கோடி நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக உழவர் முன்னணி கூட்டமைப்பு சார்பில் இறையூர் தனியார் சர்க்கரை ஆலை முன்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் திட்டக்குடி தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் திடீரென சர்க்கரை ஆலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதுஅவர்களது கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையேற்ற, உழவர் முன்னணியினர் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்