ஏரிக்கரையில் பள்ளம் தோண்டிய விவசாயிகள்

மதகுகள் சீரமைக்கக்கோரி ஏரிக்கரையில் விவசாயிகள் பள்ளம் தோண்டினர்.

Update: 2022-10-10 10:12 GMT

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் ஏரி கடந்த ஆண்டு பெய்த மழையில் நிரம்பியது. தொடர்ந்து ஒரு ஆண்டாக ஏரியில் தண்ணீர் உள்ளது. ஏரி மதகுகள் மூடப்பட்டுள்ளதால் விவசாய நிலங்களில் தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது.

இதனால் ஏரிக்கு கீழ் நிலங்கள் வைத்துள்ள விவசாயிகள் கிணற்றில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் இந்த ஏரிக்கு வரும் கால்வாயில் கழிவுநீர் கலப்பதால், தண்ணீர் முழுவதும் கழிவுநீராக உள்ளது. விவசாயத்திற்கு பயன்பட முடியாமல் உள்ளது.

எனவே கண்ணமங்கலம் ஏரி மதகுகளை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை பொதுப்பணித் துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் இன்று கண்ணமங்கலம் ஏரிக்கரை மீது பள்ளம் தோண்டினர்.

இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்று பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் உடனடியாக ஏரி மதகுகளை சீரமைக்க பொதுப்பணித்துறை மூலம் ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர்.

அதன்பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்