பெரம்பலூர் மின் பகிர்மான கோட்டத்தை 2 ஆக பிரிக்க விவசாயிகள் கோரிக்கை

பெரம்பலூர் மின் பகிர்மான கோட்டத்தை 2 ஆக பிரிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-02-14 20:11 GMT

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்களின் குறைதீர்க்கும் கூட்டம் பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்தின் செயற்பொறியாளர் (பொது) சேகர் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) முத்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டனர். கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமையில், விவசாயிகள் கொடுத்த மனுவில், மின் நுகர்வோர்கள் அதிகரித்து வருவதால் பெரம்பலூர் மின் பகிர்மான கோட்டத்தை 2 ஆக பிரித்து புதிதாக ஒரு கோட்டம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இடி, மின்னல் தாக்கி சேதமடையும் வீட்டு மின் இணைப்பு மீட்டர், விவசாய மின் இணைப்பு மீட்டர்களை கட்டணமின்றி மாற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னுரிமை பதிவு ஏட்டில் பதிவு செய்து காத்திருக்கும் 440 விவசாயிகளுக்கு உடனடியாக விவசாய மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்