காஞ்சீபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் - 29-ந் தேதி நடக்கிறது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 29-ந் தேதி நடக்கிறது. விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற கலெக்டர் கேட்டு கொண்டுள்ளார்.

Update: 2022-07-26 08:52 GMT

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஜூலை மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற ஜூலை 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுனர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். எனவே விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

இக்கூட்டம் நடைபெறும் அன்றைய தினம் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தில் இணையவழி பதிவுகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் அரசு அறிவுரையின்படி, கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை நகலை காண்பித்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கட்டாயமாக முககவசம் அணிந்து வர வேண்டும். மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்