சுரண்டை பள்ளியில் விவசாயிகள் தினம்

சுரண்டை பள்ளியில் விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது.;

Update:2023-10-19 00:15 IST

சுரண்டை:

சுரண்டை எஸ்.ஆர் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனர் சிவபபிஸ்ராம் தலைமை தாங்கினார். பள்ளி செயலர் சிவடிப்ஜினிஸ் ராம், முதல்வர் பொன் மனோன்யா மற்றும் தலைமை ஆசிரியர் மாாிக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் விவசாயிகளின் முக்கியத்துவம் குறித்தும் விவசாயத்தின் பயன்கள் குறித்தும் மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து விவசாயத்தால் மனிதர்களுக்கு கிடைக்கும் உற்பத்தி பொருட்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாணவர்கள் அனைவரும் விவசாயிகள் போன்று உடை அணிந்து வருகை தந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை தங்கசுபா செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்