விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

ராதாபுரத்தில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-01-20 20:38 GMT

ராதாபுரம்:

ராதாபுரம் வட்டார அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் வட்டார தொழில்நுட்ப குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் ராதாபுரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது. ஆலோசனை குழு தலைவர் முரளி தலைமை தாங்கினார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் விவசாயிகள் ஆலோசனை குழு ஒருங்கிணைப்பாளர் ஜாஸ்மின் லதா முன்னிலை வகித்தார்.

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட செயலாக்கம் குறித்தும், திட்ட நெறி முறைகள் குறித்தும் தரிசு நில மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் மானியம் பற்றி விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. உதவி வேளாண் பொறியாளர் இளங்கோ வேளாண் பொறியியல் துறையின் வேளாண் கருவிகளை வாடகைக்கு விடுவது பற்றிய வழிமுறைகளை எடுத்து கூறினார். தோட்டக்கலை அலுவலர் வினோத் கலந்து கொண்டு தோட்டகலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியம் குறித்து பேசினார். மேலும் பல அலுவலர்கள் பேசினார்கள். முடிவில் வேளாண்மை அலுவலர் சரண்யா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்