விவசாயிகள், முழு மானியத்தில் உரங்களை பெற்றுக்கொள்ளலாம்

குறுவை தொகுப்பு திட்டத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பித்த விவசாயிகள், முழு மானியத்தில் உரங்களை பெற்றுக் கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-21 18:10 GMT

திருத்துறைப்பூண்டி:

குறுவை தொகுப்பு திட்டத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பித்த விவசாயிகள், முழு மானியத்தில் உரங்களை பெற்றுக் கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

குறுவை சாகுபடி

திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை வட்டாரங்களில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது தமிழக அரசு அறிவித்துள்ள குறுவை தொகுப்பு திட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் 3 ஆயிரத்து 955 ஏக்கருக்கும் மற்றும் முத்துப்பேட்டை வட்டாரத்தில் 2 ஆயிரத்து 315 ஏக்கருக்கும் விவசாயிகள் குறுவை தொகுப்பு திட்டத்தில் முழுமானியத்தில் உரங்கள் பெற்று கொள்ளலாம்.

முழுமானியத்தில் உரங்கள்

இத்திட்டத்தின் கீழ் ஒரு மூட்டை யூரியா, ஒரு மூட்டை டி.ஏ.பி., 25 கிலோ பொட்டாஷ் உரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு தேவையான உரங்கள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

குறுவை தொகுப்பு திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து உரங்கள் வழங்கப்படுவதால் இணையதளம் மூலம் விண்ணப்பத்த விவசாயிகள் உடனடியாக தங்களுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் தெரிவித்து முழுமானியத்துடன் உரங்களை பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்