புல் வெட்டும் கருவிகள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

50 சதவீத மானியத்தில் புல் வெட்டும் கருவிகள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்

Update: 2023-06-17 18:45 GMT

சிவகங்கை

மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உதவிட மானிய விலையில் மின்சாரத்தினால் இயங்கும் புல் வெட்டும் கருவிகள் அரசு வழங்குகிறது. சிவகங்கை மாவட்டத்திற்கு 20 கருவிகள் இந்த திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு கருவியின் விலை ரூ.32 ஆயிரம் ஆகும் இதற்கு அதிகபட்சமாக 50 சதவீதம் மானியம் (ரூ16 ஆயிரம்) வழங்கப்படும்.

இந்த கருவியை பெற விரும்பும் விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் இரண்டு கால்நடைகள் மற்றும் அரை ஏக்கர் நீர் பாசன வசதி உள்ள தீவனப்புல் சாகுபடி செய்யக்கூடிய நிலம் மின்சார வசதியுடன் இருக்க வேண்டும்.

மேலும் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட பயனாளிகள், சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் அமைப்புச் சேர்ந்த விவசாயிகளுக்கு, இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். எனவே மின்சாரத்தினால் இயங்கும் புல் வெட்டும் கருவிகளை பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் உரிய விண்ணப்பம் கொடுக்கலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்