பாலமேடு அருகே தோட்டத்தில் விவசாயி கழுத்தறுத்து படுகொலை - போலீசார் விசாரணை
பாலமேடு அருகே தோட்டத்தில் விவசாயி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மறவபட்டி கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி (65). விவசாயியான இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் தனது தோட்டத்திற்கு விவசாயி நல்லதம்பி சென்று தனியாக இருந்துள்ளார்.
வெகு நேரமாகியும் காலை வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த அவரது மகன் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்த தந்தை நல்லதம்பியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக பாலமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடம் விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் தலைமையிலான போலீசார் உயிரிழந்த விவசாயி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.